அன்னூர் ஒட்டர்பாளையம் கிராம உதவியாளர் முத்துசாமியை கோபால்சாமி என்பவர் காலில் விழ வைத்த விவகாரம் பெரும் கண்டத்திற்குள்ளானது.
இந்நிலையில் கோபிநாத் என்று அழைக்கப்படும் கோபாலசாமி பணி செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறி நிர்வாக அலுவலர் கலைச்செல்வி புகார் அளித்தார். தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலகத்தின் உதவியாளரை காலில் விழ வைத்த நபர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, அன்னூர் காவல் நிலையத்தில் ஒட்டர் பாளையம் விஏஓ கலைச்செல்வி, அலுவலக உதவியாளர் முத்துசாமி ஆகியோர் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக இரண்டு பிரிவுகளிலும், விஏஓ அலுவலக உதவியாளர் முத்துசாமியை சாதியை சொல்லித் திட்டி அவரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்ததற்காக பிசிஆர் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் அன்னூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: ’போலி மதிப்பெண் சான்றிதழ் சமர்ப்பிக்கும் மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை’