கோயம்புத்தூர் மாவட்டம் ஆலாந்துறை பகுதி செம்மேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3ஆம் வகுப்பு சிறுவனை சில தினங்களுக்கு முன் கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்தாகவும், அதனைக் கேட்கச் சென்ற தன்னை அருவருப்பாக பார்த்ததாகவும் கூறி மாணவனின் தாயார் ஆசிரியர் மீது நேற்று முன்தினம் (ஏப்ரல்.3) ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனிடையே சிறுவன் தாயாரின் புகாரை அடுத்து, நேற்று (ஏப்.4) அப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜெயந்தி, உதவி தலைமை ஆசிரியர் தங்கமாரியம்மாள் ஆகிய இருவர் மீதும் SC/ST வன்கொடுமை தடுப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து ஆலாந்துறை காவல்துறையினர் தலைமை ஆசிரியரிடமும் உதவி தலைமை ஆசிரியரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரியரின் இச்செயலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: விருதுநகர் பாலியல் வழக்கு - நால்வரை 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு