ETV Bharat / state

குறைந்த விலையில் கார்: மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க கோவை எஸ்.பி. அறிவுறுத்தல் - கார் திருட்டு

கோயம்புத்தூர்: குறைந்த விலையில் கார் கிடைக்கிறது என மக்கள் வாங்கிவிடக் கூடாது மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டுமென காவல் கண்காணிப்பாளர் அருளரசு அறிவுறுத்தியுள்ளார்.

கார் திருட்டு
கார் திருட்டு
author img

By

Published : Nov 30, 2020, 6:26 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை காவல் துறையினர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த 6 பேர் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதனைப் பார்த்த காவல் துறையினர் அவர்களைப் பின்தொடர்ந்து மூன்று பேரை மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

கார் திருட்டு
பறிமுதல் செய்யப்பட்ட கார்கள்

இந்த விசாரணையில் மதுக்கரை பகுதியைச் சேர்ந்த சக்தி (22), திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயராஜா, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்திரன் என்பதும் தப்பியோடிய நபர்கள் சுந்தராபுரம் பகுதியில் ஆட்டோ கேரேஜ் என்ற வாகனங்கள் பழுதுநீக்கம் செய்யும் வேலை செய்துவரும் சாதிக், இம்ரான், தினேஷ் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் ஓட்டிவந்த கார் திருட்டு கார் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்திய காவல் துறையினர் இவர்கள் இதேபோன்று பல்வேறு கார்களை வாடகைக்கென எடுத்துவந்து அதில் உள்ள ஜிபிஎஸ் கருவிகளை உடைத்து எறிந்துவிட்டு கார்களை விற்பனை செய்ததாக கூறினர். இதன்பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு உத்தரவின்பேரில் மதுக்கரை காவல் துறையினர் தனிப்படை அமைத்து ஆய்வு மேற்கொண்டனர்.

கார் திருட்டு
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்

இவர்கள் எடுத்துவந்த காரை சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஆட்டோ கேரேஜில் வைத்து பாகங்களைப் பிரித்து பாகங்களை விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. மேற்கொண்டு இவர்களிடமிருந்து 11 சொகுசு கார்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, "இவர்கள் இந்தக் கார்களை எல்லாம் வெளிமாநிலங்களிலிருந்து வாடகைக்கு எடுத்து அதில் உள்ள ஜிபிஎஸ் கருவிகளை நீக்கிவிட்டு கார்களை விற்பனை செய்யும் செயலில் ஈடுபட்டு உள்ளார்கள்.

தப்பி ஓடிய மூன்று நபர்களைத் தேடிவருகிறோம். அவர்கள் கேரளாவில் இருக்கிறார்கள் என்ற தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவர்களைப் பிடித்த உடன் அவர்களிடம் கடுமையான விசாரணை மேற்கொள்ளப்படும்.

காவல் கண்காணிப்பாளர் அருளரசு பத்திரிகையாளர்கள் சந்திப்பு

கார்களின் பாகங்கள் அல்லது கார்களை குறைந்த விலையில் கிடைக்கிறது என்று வாங்கி விடக் கூடாது, மக்கள்தான் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். கோயம்புத்தூர் புறநகர்ப் பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களைக் கண்காணிப்பதற்காகத் தனிக் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.

தற்போது கைப்பற்றப்பட்டுள்ள இந்த 11 கார்களின் உரிமையாளர்களின் விவரங்கள் கிடைக்கப் பெற்றவர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது, அவர்கள் வந்ததும் அவர்களிடம் இந்தக் கார்கள் ஒப்படைக்கப்படும்" என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.