கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள கொள்ளுபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (42) மற்றும் சண்முகசுந்தரம் (47). இவர்கள் இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர்.
வரும் வழியில் பல்லடம் சாலையில் உள்ள விஜயபுரம் பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு, சாலையைக் கடக்க முயன்றபோது, எதிரே அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மகாலிங்கபுரம் காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மகளுக்கு சீர்வரிசை வாங்கப் பணமில்லாததால் தாய் எடுத்த விபரீத முடிவு!