ETV Bharat / state

மூதாட்டி கொலை வழக்கில் இளைஞருக்கு தூக்கு தண்டனை - மாவட்ட நீதிமன்றம் - man killed women in coimbatore at 2013

கோவை: அவிநாசியில் 2013ஆம் ஆண்டு மூதாட்டியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இளைஞர்
author img

By

Published : Sep 26, 2019, 5:04 PM IST

கோவை அவிநாசி சாலை பகுதியைச் சேர்ந்தவர் சரோஜா(54). இவர் 2013ஆம் ஆண்டு மாயமானதாக உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சரோஜாவை தேடிவந்தனர். இந்நிலையில் அதே ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி சரோஜா துண்டு துண்டாக வெட்டி சூட்கேட்சில் சடலமாக இருந்ததை கண்டுபிடித்தனர்.

பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த யாசர் அராபத்(23) என்ற இளைஞர் அவரை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதற்கிடையே அவர் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் தலைமறைவாக இருந்ததால் அங்கு சென்று காவல் துறையினர் யாசரை கைது செய்தனர்.

இந்த வழக்கு ஆறு ஆண்டுகளாக மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:15 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் - டெமி மூர்

Intro:Body:

2013 ம் ஆண்டு கோவை அவிநாசி ரோடு, ரஹேஜா அடுக்குமாடி குடிருப்பில் வசித்து வந்த சரோஜா என்ற பெண்மணியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி யாசர் அராபத்திற்கு 6 வருடங்கள் கழித்து இன்று தூக்கு தண்டனை

கோவை அவிநாசி ரோட்டில் உள்ள ரஹேஜா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சரோஜினி (வயது54). 21.02.2013 அன்று இவரது சடலம் துண்டுதுண்டாக வெட்டிய நிலையில் சூட்கேசில் இருந்து போலீஸாரால்  கண்டெடுக்கப்பட்டது. இரண்டு சூட்கேசுகளில் ஏழு துண்டுகளாக இவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் அந்த வீட்டில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த யாசர் அராபத்(வயது 23) என்பவர் வசித்து வந்தது தெரியவந்தது. யாசர் அரபாத் தலைமறைவான நிலையில் போலீஸார் அவனை தேடி வந்தனர். ஒரு மாதம் கழித்து யாசர் அரபாத் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டனத்தில் உள்ள தனியார் லாட்ஜில் பிடிப்பட்டார். அவருக்கு கோவை நீதிமன்றம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

ஆறு வருடங்கள் கழித்து இந்த வழக்கிற்கு இன்று தூக்கு தண்டனை என்று  தீர்ப்பளிக்கப்பட்டது

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.