கோவை மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கோலார்பட்டி உள்ளாட்சித் தேர்தலில் பஞ்சாயத்துத் தலைவர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது . இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த விருத்தாசலம் என்பவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 12ஆம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால், வேட்பு மனு பரிசீலனையில் தனது பெயரை அறிவிக்காததால் தேர்தல் அதிகாரியிடம் சென்று விருத்தாசலம் கேட்டுள்ளார். இந்நிலையில் விருத்தாசலத்தை தேர்தல் அதிகாரி இழிவாக பேசியது மட்டுமல்லாமல், வெளியே தள்ளியதில் சிறிது காயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கிருந்த காவலர்கள் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று ஆட்டோவில் ஏற்றி, அரசு மருத்துவமனையில் அவசர வார்டில் விருத்தாசலத்தைச் சேர்த்து விட்டனர்.
இதையடுத்து, ஆளுங்கட்சியினர் தலையிட்டால் தன்னைத் தேர்தலில் போட்டியிட விடமால் பலர் தடுக்க முயற்சிப்பதாக சார் ஆட்சியரிடம் விருத்தாசலம் மனு அளித்துள்ளார். மேலும், எந்த நேரத்திலும் தனது உயிருக்கு ஆபத்து உள்ள காரணத்தினால் பாதுகாப்பு வழங்கியும், மீண்டும் வேட்புமனு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க: பள்ளிச் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவன் கால் முறிவு!