கோவை மாவட்டம் கரும்பு கடை பகுதியில் தேசிய கல்வி கொள்கையை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கையை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
மேலும், பாஜக அரசு மாணவர்கள் கல்வியில் காவியை புகுத்தி மாணவர்களின் எதிர்கால கனவை கேள்வி குறியாக்குவது போல் செயல்படுகிறது எனவும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்தக் கல்விக் கொள்கையை கண்டித்து பல்வேறு இடங்களில் தகுந்த இடைவெளியை பின்பற்றி பிரச்சாரம் நடத்த உள்ளதாகவும், மத்திய அரசின் இந்த தேசியக் கல்வி கொள்கையை ஒரு போதும் ஏற்க முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.