கோவை மாவட்ட அனைத்து ஜமாத் இஸ்லாமிய அமைப்புகளின் செய்தியாளர் சந்திப்பு பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. அதில், ' குடியுரிமை சட்டத்திருத்தத்தைக் கண்டித்து வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று கடையடைப்பு போராட்டம் நடத்த இருக்கிறோம். இதில் தமிழ்நாடு முஸ்லிம் அமைப்பு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எம்எம்கே போன்ற பலரும் கலந்து கொள்கிறார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைத்து மக்களுக்கும் சமம் என்றும், அதை மதத்தின் வீதியால் யாரும் பிரிக்கக் கூடாது.
அண்டை நாடுகளிலிருந்து வாழ்வாதாரத்திற்காக குடிபெயரும் மக்களில் முஸ்லிமல்லாதவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படுவது கண்டனத்திற்குரியது. மத்திய அரசு குடியுரிமை சட்டத் திருத்தத்தைத் திரும்ப பெறாவிட்டால், வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று காலை முதலே கடைகள், வீடுகளில் கறுப்புக் கொடி கட்டி போராட்டத்தைத் தொடங்கி விடுவோம்' இவ்வாறு தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதுக்கோட்டையில் 232 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை - மாவட்ட ஆட்சியர் தகவல்!