ETV Bharat / state

சிஏஏ-க்கு எதிர்ப்பு: வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி இஸ்லாமியர்கள் போராட்டம் - CAA protest in muslims

கோயம்புத்துார்: கரும்புக்கடை பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, வீடுகளின் முன்பு தேசியக் கொடி ஏற்றி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்புத்துார்: கரும்புக்கடை பகுதிகளில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, முஸ்லிம்கள் அவர்களின் விடுகளின் முன்பு தேசிய கொடி ஏற்றி போராட்டத்தில் ஈ்டுபட்டனர்.

author img

By

Published : Feb 19, 2020, 7:01 AM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூரிலும் கடந்த இரு மாதங்களாக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கோயம்புத்துார் கரும்புக்கடை பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள், சிஏஏ, என்ஆர்சி போன்ற மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தங்களின் வீடுகளின் முன்பு தேசியக் கொடியை ஏற்றி எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

CAA எதிராக முஸ்லிம்கள் விடுகளில் தேசிய கொடி ஏற்றி போராட்டம்

மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னையில் போராடியவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் வீட்டு வாசல் முன்பாக தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கூறுகையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இந்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இஸ்லாமியர்களும் தேசத்தின் பூர்வகுடிகள் என்பதை உணர்த்தவே வீடுகளின் முன்பாக தேசியக் கொடியை ஏற்றி போராடினோம் என்றனர்.

இதையும் படிக்க:சேலத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.