ETV Bharat / state

கோவை புறநகரில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கம்!

Bus running in Coimbatore: 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், கோவை புறநகரில் இருந்து பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றது.

Buses are running in Coimbatore
கோவை புறநகரில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 9, 2024, 7:43 AM IST

Updated : Jan 9, 2024, 1:34 PM IST

கோவை புறநகரில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கம்

கோயம்புத்தூர்: 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு உள்ளிட்ட 25 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளன. இந்த வேலை நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, கோவை புறநகர் பகுதிகளான கருமத்தம்பட்டி மற்றும் சூலூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் போக்குவரத்து பணிமனைகளில் இருந்து, இன்று (ஜன.9) காலை முதல் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது.

மேலும், அதிகாலை 4 மணி முதல் நகரப் பேருந்துகள் இயக்கப்படுவதாலும், போதிய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் உள்ளதால் பொதுமக்களுக்கு பாதிப்பின்றி பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக கருமத்தம்பட்டி தொழிலாளர் முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் ராஜேந்திரம் தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுமக்கள் பாதிப்பு அடையாத வண்ணம் கருமத்தம்பட்டி கிளையில் உள்ள 43 பேருந்துகளும், அனைத்து தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஓட்டுநர், நடத்துநர்களும் இயக்கி வருவதால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. விரைவில் அனைத்து கோரிக்கைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரும் தீர்த்து வைப்பார்கள் என தெரிவித்தார்.

இந்த நிலையில், அதிகாலை முதல் போக்குவரத்து பணிமனைகள் முன்பாக அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தவிர்க்க, சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், தீயணைப்புத் துறையினரும் பணிமனையில் தயார் நிலையில் உள்ளனர். சூலூர் பணிமனையில் இருந்தும், அன்னூர் பணிமனையில் இருந்தும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை மண்டலம் பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சில தொழிற்சங்கங்கள் இன்று (ஜன.9) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கீழ்கண்டவாறு பேருந்துகள் இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

1. LPF தொழிற்சங்கம் மற்றும் இதர வேலை நிறுத்தத்தில் பங்கு பெறாத தொழிற்சங்கத்தைச் சார்ந்த ஓட்டுநர், நடத்துநர் வைத்து முழுமையாக பேருந்து இயக்கப்படும்.

2. வேலை நிறுத்தம் தொடரும்பட்சத்தில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து பயிற்சி பெற்ற வெளி ஓட்டுநர்களின் பட்டியல் பெற்று, அனைத்து பேருந்துகளும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

3. தேவைப்படும் பட்சத்தில், ஓய்வு பெற்ற ராணுவ ஓட்டுநர்களை வைத்து இயக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

4. பணிமனை மற்றும் பேருந்து நிலையங்களுக்கு மாவட்ட காவல் துறையை அணுகி, போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோவை கோட்டம் சார்பாக, பொதுமக்களுக்கு இடையூறின்றி அனைத்து பேருந்துகளையும் முழுமையாக இயக்க மேற்கண்ட அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பகலில் ஆம்னி பேருந்துகளை இயக்க தயார்.. அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

Last Updated : Jan 9, 2024, 1:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.