திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் முருகானந்தம் கோவைக்கு செல்வதற்காக பேருந்தில் முன்பதிவு செய்திருந்தார். பயணம் செய்யும் பேருந்தில் அவர் பதிவு செய்திருந்த இருக்கையில் வேறு ஒருவர் அமர்ந்திருந்துள்ளார். இது குறித்து வழக்கறிஞர் முருகானந்தம் பேருந்தின் ஓட்டுநர் சுப்பையாவிடம் கேட்டுள்ளார். அதற்கு ஓட்டுநர் சரியாக பதிலளிக்காததால், வழக்கறிஞர் கோபமாக பேசியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, முருகானந்தம் பாதி வழியில் இறங்கி கோவை செல்ல வேறு பேருந்து ஏறியுள்ளார். கோபம் அடங்காத ஓட்டுநர் சுப்பையா முருகானந்தத்தை பழி வாங்க முடிவெடுத்துள்ளார். அதன்படி முருகானந்தத்தை பின் தொடர்ந்து தனது சக ஓட்டுநர்களான தஞ்சாவூரைச் சேர்ந்த வெங்கடேசன், திருவாரூரைச் சேர்ந்த அருண்குமார் ஆகியோருடன் சேர்ந்து தாக்கியுள்ளார்.
இதுகுறித்து, வழக்கறிஞர் முருகானந்தம் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் சுப்பையா, வெங்கடேசன், அருண்குமார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: குமரியில் தொடரும் அரசுப் பேருந்து விபத்துக்கள்: பயத்தில் பயணம் செய்யும் மக்கள்!