கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் வாடகைக்கு கடை எடுத்து பேக்கரி நடத்தி வருகிறார். கடைக்கு வாடகையாக ரூ. 25 ஆயிரம் அதன் உரிமையாளர் சண்முகசுந்தரராஜிடம் கொடுத்து வந்துள்ளார்.
கரோனா ஊரடங்கால் நாகராஜ் பேக்கரியை நான்கு மாதங்களாக திறக்கவில்லை. இதனால் நாகராஜால் இரண்டு மாதங்களாக வாடகை கொடுக்க முடியவில்லை. இதனால் சண்முகசுந்தரராஜ் அவரது மனைவி, மகன் விக்னேஷ்பிரபு ஆகியோர் நாகராஜிக்கு தொல்லை கொடுத்துள்ளனர். இது குறித்து ஆகஸ்ட் 20ஆம் தேதியன்று நாகராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 29ஆம் தேதி சண்முகசுந்தரராஜ் அவரது மனைவி, மகன் விக்னேஷ்பிரபு ஆகியோர் நாகராஜின் பேக்கரிக்குள் புகுந்து பொருள்களை சேதப்படுத்தி, அங்கிருந்த 7,342 ரூபாய்க்கான காசோலையை எடுத்துச் சென்றனர். மீண்டும் நாகராஜ் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் இன்று (செப்.3) நாகராஜ் தனது மனைவியுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
இதையும் படிங்க: வாடகை பிரச்னையில் தீக்குளித்த சம்பவம்: சிசிடிவி காட்சி வெளியீடு!