கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அலமேலு.கணவனை இழந்தவர். இவரது மகன் அருண் குமார் (25)ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.மகள் பிரீத்தா உள்ளிட்ட 3 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று(மார்ச்.6) மாலை அருண்குமார், பிரீத்தா இருவரும் வீட்டில் இல்லாததால் அவர்களை அலமேலு தேடியுள்ளார். அப்போது, வீட்டைவிட்டு செல்கிறோம் என இருவரும் எழுதி வைத்த கடிதம் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக அலமேலு பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில், வீட்டு தண்ணீர் தொட்டியில் இருவரும் இன்று(மார்ச்.7) சடலமாக மீட்கப்பட்டனர். கடன் பிரச்சினையால் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருவரின் உடலையும் மீட்ட காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: கோயில்களின் பூட்டை உடைத்து அம்மன் தாலியைத் திருடிய கும்பல்