கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை அருகே உள்ள சோலையார் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் மணி. இவர் வால்பாறை பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் ஆகாஷ். ஆகாஷ் தன் நண்பர்களுடன் தேயிலைத் தோட்டத்தில் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந் நிலையில், அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை ஆகாஷைத் தாக்கியது.
இதனால் அதிர்ச்சியடைந்த அருகிலிருந்த ஆகாஷின் நண்பர்கள் கூச்சலிட, பொதுமக்கள் அங்கு வந்து சிறுத்தையை விரட்டினர். சிறுத்தை தாக்கியதில் படுகாயமடைந்த ஆகாஷ் வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் சிறுவனுக்கு ஏற்பட்ட தொடர் மூச்சுத் திணறல் காரணமாக, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் விரைவில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'ஐ எம் ஸாரி பிஎம்'- அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மம்தா பானர்ஜி ஆதரவு!