கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு - கேரள எல்லைகள் 35 நாட்களாக மூடப்பட்டிருந்தன. இதனால் கேரள - தமிழ்நாடு போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது மத்திய அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின் படி இ-பாஸ் எடுத்து வரும் பொதுமக்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லலாம் என அறிவித்துள்ளது.
இந்நிலையில் கோவையிலிருந்து கேரளாவிற்கு மக்கள் கூட்டம் சென்று வருகிறது. இதனால் முக்கிய எல்லையான வாளையார் சோதனைச் சாவடியில் கடும் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதால், வாகனங்கள் சுமார் மூன்று கிலோ மீட்டருக்கும் மேல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அரசானது கரோனாவால் கூட்டம் சேரக்கூடாது என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது இவ்வாறு நீண்ட நேரம் காத்திருப்பது வைரஸ் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விரைந்து சோதனைகளை மேற்கொள்ள அரசு ஏற்பாடு செய்ய வேண்டுமென பொது மக்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க...பல ஆண்டுகளாக அக்கறையில்லாமல் இருக்கும் அரசு... சொந்த செலவில் சாலை அமைத்த கிராமம்...!