கோவை: நேற்று செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தமன், இரவிற்குள் மாவட்ட நிர்வாகம் கோவை மாநகர பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்றவில்லை என்றால் பாஜகவினர் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அகற்றுவோம் என தெரிவித்திருந்தார்.
அதன்படி நேற்று இரவு கோவை அவிநாசி சாலையில் மேம்பால தூண்களில் ஒட்டப்பட்டுள்ள திமுக போஸ்டர்களை பாஜகவினர் அகற்ற முடிவெடுத்து அங்கு திரண்டனர். திமுக போஸ்டர்கள் இல்லாமல் அனைத்து போஸ்டர்களையும் அகற்ற முடிவு எடுத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அப்போது திமுகவினரும் அங்கு கூடியதால் பரபரப்பான சூழல் நிலவியது. அங்கு காவல்துறையினரும் குவிக்கப்பட்டனர்.
எனினும் பாஜகவினர் கண்டன முழக்கங்களை எழுப்பியபடி திமுக வினரால் ஒட்டப்பட்டிருந்த சில போஸ்டர்களை அகற்றினர். அவர்களை காவல்துறையினர் தடுத்ததால் பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து பாஜகவினர் தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாக கூறி கலைந்து சென்றனர். அதனைத் தொடர்ந்து இரவோடு இரவாக திமுகவினர் பாஜகவினர் அகற்றிய போஸ்டர்கள் இருந்த இடத்தில் புதிதாக போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: சுதந்திர தினவிழா: 'அனைவரது வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றுங்கள்' - கோவை கலெக்டர் வேண்டுகோள்!