ETV Bharat / state

பாஜக ஒபிசி செயலாளர் கொலை - NIA விசாரிக்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்! - கேரளா அரசு மீது வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

கேரளாவில் பாஜக ஒபிசி செயலாளர் படுகொலை செய்யப்பட்டது குறித்து NIA விசாரிக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்
author img

By

Published : Dec 19, 2021, 6:20 PM IST

கோயம்புத்தூர்: கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர், தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று(டிச.19) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் மழை வெள்ளப்பாதிப்பிற்கு பிறகு, அரசின் வழக்கமான செயல்முறைகள் நடைபெற தொடங்கியுள்ளது.

பொள்ளாச்சிப் பகுதியில் சிறு குறு தொழிற்சாலைகளில் ஆளும் கட்சியின் பெயரைப் பயன்படுத்தி குறிப்பாக அமைச்சர்களின் பெயரைப் பயன்படுத்தி வசூல் செய்யப்படுவதாக தகவல்கள் வருகின்றன. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் தெரிவிக்கவும் தயங்குகின்றனர். முதலமைச்சர் உடனடியாக இதில் கவனம் செலுத்தி பணம் வசூலிப்பவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

ஜனவரி மாதம் முதல் கைத்தறி ரகங்களுக்கு 12 விழுக்காடு ஜிஎஸ்டி அதிகரிப்பதாக, ஜிஎஸ்டி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதற்கு விளக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இது தொடர்பாக மத்திய மற்றும் மாநில நிதி அமைச்சர்களிடம் கோரிக்கை வைக்க உள்ளேன். முதலமைச்சர் ஸ்டாலின், நிதியமைச்சர் மூலம் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நிறைவேற்றித் தர வேண்டும்.

NIA விசாரணை வேண்டும்

கோவை மாநகராட்சியைப் பொறுத்தவரை குப்பைகளை எடுப்பது மிகவும் மோசமடைந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் நான் தொகுதிக்குச் செல்லும் பொழுது மக்கள் இந்த பிரச்னையை முன் வைக்கின்றனர்.

சாலைகளைக் கூடிய விரைவில் சரி செய்வதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு மாத காலத்தில் அதனை செய்யவில்லை என்றால் மக்களைத் திரட்டிப் போராடுவோம். கேரள பாஜக ஒபிசி செயலாளர் படுகொலை செய்யப்பட்டது குறித்து NIA (National Investigation Agency) விசாரணை மேற்கொள்ள வேண்டும். கேரளாவில் கம்யூனிஸ்ட் அரசாங்க ஆட்சியில் தான், படுகொலைகள் அதிகம் நிகழ்ந்து வருகின்றன.

இந்தக் கொலையை அந்நிய நாட்டில் திட்டமிட்டு செயல்படுத்தியதாகப் பார்க்கிறோம். எனவே, இதனை மாநில அரசாங்கம் விசாரிப்பதைத் தவிர்த்து NIA விசாரிக்க வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.

மத ரீதியான பிரச்னைகளை பேசுவதில் வல்லுநர்

பாஜகவினர் பொருளாதாரத்தைப் பற்றி அதிகம் பேசாமல் மதரீதியாக அதிகம் பேசி வருவதற்கான காரணம் கேட்டதற்கு பதிலளித்த அவர், "எனது அம்மா தக்காளி சட்னி நன்கு வைப்பார்கள். எனது அண்ணியார் பிரியாணி நன்கு சமைப்பார்கள். பிரியாணி செய்பவர்களிடம் தக்காளி சட்னி செய்யச் சொன்னால் எப்படி வராதோ, அதேபோல் மத ரீதியான பிரச்னைகள் பேசுவதில் பாஜகவினர் வல்லுநர்களாக இருக்கின்றனர். எனவே, அதைப் பற்றி பேசுவதில் தவறில்லை" என சூசகமாகப் பதிலளித்தார்.

இதையும் படிங்க: IT Park in Karur:'மேட் இன் கரூர் பிரபலமடைய வேண்டும்' - அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.