கோவை மாவட்டம் செட்டிப்பாளையம் பகுதியில் ஜே.கே டயர்ஸ் நிறுவனம் சார்பில் 22வது தேசிய சாம்பியன்ஷிப் கார் மற்றும் பைக் ரேஸ்கள் நடந்தன. காலை துவங்கி மாலை வரை 4 பிரிவுகளில் கார் பந்தயமும், 2 பிரிவுகளில் இருசக்கர வாகன போட்டிகளும் நடைபெற்றன. எல்.ஜி.பி பார்முலா 4 கார் பந்தயத்தில் அவலான்சி ரேசிங் அணியைச் சேர்ந்த சென்னை வீரர் விஷ்ணு பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலிருந்தும் வீரர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டனர். பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்குச் சுழற்கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. புனேவை சேர்ந்த 12 வயது சிறுவன் திக்சன் இரண்டு பிரிவுகளில் முதல் பரிசை தட்டிச்சென்றான். அதே போல் பெண்களுக்குத் தனியாக நடத்திய போட்டிகளில் கோப்பைகள் வழங்கப்பட்டன.
மேலும், நடைபெற்ற இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன போட்டிகளில் வாகனங்கள் அதிவேகத்தில் சீறிப்பாய்ந்த காட்சி பார்வையாளர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.