ETV Bharat / state

'பொள்ளாச்சி பாலியல் வீடியோவில் இருப்பது நான் அல்ல'- பார் நாகராஜ் 'பல்டி'!

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக வெளியான வீடியோவில் இருப்பது நான் அல்ல எனவும், மார்பிங் செய்து பொய்யான தகவல் பரப்பி வருவதாகவும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பார் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

pollachi video
author img

By

Published : Mar 14, 2019, 5:14 PM IST

பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில், பல்வேறு தரப்பினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இவ்விவகாரம் தொடர்பாக சதீஷ், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சபரிராஜன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள மாணவர்கள், குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்து வரும் நிலையில், கைதான நால்வர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதனிடையே
பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கியதாக அதிமுகவைச் சேர்ந்த பார் நாகராஜ், கைதாகி ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து நாகராஜ் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து கட்சியின் தலைமை நீக்கியது.

இதனிடையே பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக வெளியான வீடியோவில் பார் நாகராஜ் இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்து நாகராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் தனக்கும், இந்த பிரச்னைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறியிருந்த நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

சமூக வலைதளங்களில் வலம் வரும் வீடியோவில் இருப்பது நான் அல்ல. செய்திகளில் நான் தலைமறைவாக இருப்பதாக ஒளிப்பரப்ப படுவதால் தங்கள் குடும்பம் மிகுந்த மன உளச்சலுக்கு ஆளாகி உள்ளது. மார்பிங் செய்து வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது. தேர்தல் நேரத்தில் அரசியல் லாபத்திற்காக பொய்யான தகவல்கள் பரப்பப்படுகிறது.

நேற்று உடைக்கப்பட்ட பார் தன்னுடையது அல்ல. டாஸ்மாக் பாரை கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பே விற்று விட்டேன். தனக்கு வேண்டாதவர்கள்தான் பாரை உடைத்துள்ளனர். தேவை இல்லாத அவதூறுகளை என் மீது பரப்ப வேண்டாம். எந்த நேரமும் காவல் விசாரணைக்கு நான் ஆஜாராக தயார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளித்துள்ளேன், என்றார்.

அவருடன் அவரது தாயார் பேபியும் தனியாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சு.சீனிவாசன்.     கோவை

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக வெளியான வீடியோவில் இருப்பது தான் அல்ல எனவும், மார்பிங் செய்து பொய்யான தகவல் பரப்பி வருவதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பார் நாகராஜ் தெரிவித்துள்ளார்

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சதீஷ்,திருநாவுக்கரசு, வசந்தகுமார்,சபரிராஜன் ஆகியோர் மீது வழக்கு செய்யபட்டது. மாணவர்கள் அரசியல் கட்சியினர் குற்றசெயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்து வரும் நிலையில் இந்த நால்வர் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கியதாக அதிமுகவை சேர்நாத பார் நாகராஜ், கைதாகி ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து அதிமுகவில் இருந்தும் நாகராஜ் நீக்கப்பட்டார்.இதனிடையே ஆபாச படத்தில் பார் நாகராஜ் இருப்பதாக செய்திகள் வெளியாகின
இதற்கு மறுப்பு தெரிவித்து பார் நாகராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் தனக்கும் இந்த பிரச்சனைக்கு எந்த சம்பதமும் இல்லை என கூறியிருந்த நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதில் சமூக வலைதளங்களில் வலம் வரும் வீடியோவில் இருப்பது தான் அல்ல எனவும் செய்திகளில் தான் தலைமறைவாக இருப்பதாக ஒளிப்பரப்ப படுவதால் தங்கள் குடும்பம் மன உளச்சலுக்கு ஆளாகி உள்ளதாக கூறினார். மேலும் மார்பிங் செய்து வீடியோ வெளியிடப்பட்டு இருப்பதாகவும், தேர்தல் நேரத்தில் அரசியல் இலாபத்திற்காக பொய்யான தகவல்கள் பரபப்படுவதாக தெரிவித்தார். 
நேற்று உடைக்கப்பட்ட பார் தன்னுடையது அல்ல எனவும், டாஸ்மாக் பாரை கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பே விட்டு விட்டதாகவும் கூறிய அவர், தனக்கு வேண்டாதவர்கள் தான் பாரை உடைத்தாக தெரிவித்தார். மேலும்தேவை இல்லாத அவதூறுகளை என் மீது பரப்ப வேண்டாம்.எந்த நேரமும் காவல் விசாரணைக்கு நான் ஆஜாரக தயார் என கூறியவர் இது குறித்து மாவட்ட் ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளிக்க வந்ததாக தெரிவித்தார். அவருடன் அவரது தாயார் பேபியும் தனியாக மாவட்ட் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.