ETV Bharat / state

பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகள்

கோவை: பொள்ளாச்சி வடக்கு, தெற்கு ஒன்றியங்களில் வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

author img

By

Published : Dec 28, 2019, 6:46 PM IST

Ballot boxes
Ballot boxes

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஒன்றியங்களுக்குட்பட்ட தெற்கு ஒன்றியத்தில் 26 ஊராட்சிகளில் 129 வாக்குச்சாவடிகளும், வடக்கு ஒன்றியத்தில் 39 ஊராட்சிகளில் 183 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் உள்ளாட்சித் தேர்தல் பெரிய அளவிலான பிரச்னைகளின்றி நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது.

பதற்றம் நிறைந்தவையாக பட்டியலிடப்பட்டிருந்த ஓட்டுச்சாவடிகளுக்கு தலா ஒரு எஸ்.ஐ., தலைமையில் கூடுதல் காவல் பாதுகாப்பு அளித்தனர். கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டிருந்தன. தெற்கு, வடக்கு ஒன்றியங்களில் ஏ.டி.எஸ்.பி., விஜய் கார்த்திக் ராஜ் தலைமையில், ஆறு டி.எஸ்.பி.,க்கள், 12 இன்ஸ்பெக்டர்கள், 25 சிறப்பு காவலர்கள் என மொத்தம், 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்ட வாக்குபெட்டிகள்

இந்நிலையில் வாக்குப்பதிவு நேற்று மாலை ஐந்து மணியுடன் நிறைவடைந்தது. வாக்குச்சாவடிகளில் உள்ள அலுவலர்கள், முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. தெற்கு ஒன்றியத்தில் அமைக்கப்பட்ட வாக்குப்பதிவு மையத்திலிருந்து வாக்குப்பெட்டிகள் பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், வடக்கு ஒன்றியத்தில் அமைக்கப்பட்ட வாக்குப்பதிவு மையத்திலிருந்து வாக்குப்பெட்டிகள் பல்லடம் சாலையில் உள்ள பிஏ பொறியியல் கல்லூரியிலும் காவல் துறை பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

ஜனவரி 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பதால் வாக்குப்பெட்டிகள் வைத்திருக்கும் மையங்களுக்கு பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிரதமர் உரையை கேட்க மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் - ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

Intro:policeBody:policeConclusion:பொள்ளாச்சி வடக்கு, தெற்கு ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் பெரிய அளவில் பிரச்சனை இன்றி நடந்து வாக்குப்பெட்டிகள் ஓட்டு எண்ணும் மையத்தில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி டிசம்பர் : 28

பொள்ளாச்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட தெற்கு ஒன்றியத்தில் 26 ஊராட்சிகளில் 129 ஓட்டுச் சாவடிகளும் வடக்கு ஒன்றியத்தில் 39 ஊராட்சிகளில் 183 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டு நேற்று ஓட்டுப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி முதல் எந்த அசம்பாவிதங்களும் இன்றி ஓட்டுப்பதிவு நடைபெற்றது. பதட்டமான வாக்குச் சாவடிகளுக்கு ஒரு எஸ்.ஐ தலைமையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணித்து வந்தனர். மற்றும் பொள்ளாச்சி தெற்கு வடக்கு ஒன்றியங்களில் ஏடிஎஸ்பி விஜய் கார்த்திக் ராஜ் தலைமையில் ஆறு டிஎஸ்பிக்கள் 12 இன்ஸ்பெக்டர்கள் 25 சிறப்பு போலீஸ் என மொத்தம் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இந்நிலையில் ஓட்டுப்பதிவு நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது ஓட்டு பெட்டிகளுக்கு அந்தந்த வாக்குச்சாவடிகளில் உள்ள அதிகாரிகள் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் வடக்கு ஒன்றியத்தில் அமைக்கப்பட்ட வாக்குப்பதிவு மையத்திலிருந்து பல்லடம் சாலையில் உள்ள பி ஏ பொறியியல் கல்லூரிக்கும் தெற்கு ஊராட்சி ஒன்றியத்தில் அமைக்கப்பட்ட வாக்குப்பதிவு மையத்திலிருந்து எடுத்துவரப்பட்ட வாக்குப்பெட்டிகள் பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் வைக்கப்பட்டுள்ளது. வரும் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பதால் வாக்குப் பெட்டிகள் வைத்திருக்கும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.