இலங்கை நிழல் உலக தாதாவான அங்கோடா லொக்கா, சட்டவிரோதமாக தமிழ்நாட்டிற்குள் நுழைந்து பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்ததாகவும் கடந்த ஜூலை மாதம் கோவையில் உயிரிழந்த அவரது உடல் மதுரை தத்தநேரி மயானத்தில் தகனம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அவரது காதலி, லொக்காவின் நண்பர் மற்றும் வழக்கறிஞர் சிவகாமசுந்தரி உள்ளிட்ட மூன்று பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைதுசெய்து அந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி விசாரணையை தொடர்ந்து அமானி தான்ஜி சென்னை புழல் சிறையிலும், சிவகாமசுந்தரி கோவை மத்தியச் சிறையிலும், தியானேஸ்வரன் பெருந்துறையில் உள்ள சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை அன்று பிணை கேட்டு மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த விசாரணை இன்று (அக். 07) நடைபெற்ற நிலையில் சிபிசிஐடி சார்பில் குற்றப்பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யப்படாததால் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தோத்திரமேரி மூன்று பேருக்கும் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:மீண்டும் தீவிரமடையும் அங்கொடா லொக்கா வழக்கு - தென் மாவட்டங்களில் சிபிசிஐடி முகாம்