மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கோவை குறிச்சி பகுதியில் ஆயிரம் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் வேலுமணி, கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு சீர் வரிசைகளை வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் ஆயிரம் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளையல், இனிப்பு பலகாரங்கள், சேலை ஆகியவை அடங்கிய சிறு பரிசுகளும் அளிக்கப்பட்டன.
மேலும், இதில் பேசிய அமைச்சர் எஸ் பி வேலுமணி, எதுவும் செய்யாமல் ஸ்டாலின் முதலமைச்சராக விரும்புகிறார் என்று விமர்சித்தார்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் நகை திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கைது!