ETV Bharat / state

ரூ.5 செலவில் 25 கிமீ பயணம்... கோவை மாணவர்களின் அசத்தும் மின்சார வாகனம்...!

கோவை: 5 ரூபாய் செலவில், 25 கிமீ தூரம் வரை பயணிக்கக் கூடிய மின்சார வாகனத்தை கல்லூரி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.

awesome-electric-vehicle-from-coimbatore-students

author img

By

Published : Oct 28, 2020, 7:49 PM IST

இரு சக்கர வாகனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இன்னும் சொல்லபோனால் இருசக்கர வாகனம் என்பது அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. பெரும்பாலான மக்கள் இருசக்கர வாகனங்களில் அதிகமாக பெட்ரோல் வாகனங்களையே வாங்குகின்றனர். அதற்கேற்ப விலையும் உள்ளது.

இதனிடையே பெட்ரோல், டீசல் விலையேற்றம், பொருளாதார நெருக்கடி ஆகியவை மின்சார வாகனங்களின் தேவையை அதிகரித்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் குறைந்த தூரம் பயணிக்க ஏதுவாக உருவாக்கப்பட்டதே எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள். எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் பெட்ரோல் இல்லாமல் பேட்டரியில் இயங்குவதோடு, காற்று மாசுபாட்டை ஏற்படுத்தாத வகையில் புகையை வெளிப்படுத்தாத வாகனங்களாக இருக்கிறது. இன்னும் 20 ஆண்டுகளில் இப்போது பெட்ரோல் வாகனங்களுக்கு இருக்கும் மவுசு, எல்க்ட்ரிக் வாகனங்களுக்கு இருக்கும்.

கோவை மாணவர்களின் அசத்தும் மின்சார வாகனம்

தற்போதே பெரும்பாலானோர் இந்த எலக்ட்ரிக் இரு சக்கர வாகன பயன்பாட்டிற்கு மாறி வருகின்றனர். இந்த வகையான வாகனத்தைப் பயன்படுத்துவோர் பிரச்னையாகக் கூறுவது, எலக்ட்ரிக் வாகனத்தை சார்ஜ் செய்ய அதிக நேரம் எடுக்கிறது எனவும், வாகனத்தின் எடையையும் தான். ஏனென்றால் எல்க்ட்ரிக் வாகனங்கள் குறைந்தது 50 கிலோவிற்கும் மேல் தான் இருக்கும்.

இதனை சரி செய்யும்விதமாக எடையை குறைத்தும், வேகமாக சார்ஜ் செய்யும் வகையிலும் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தையும் வடிவமைத்துள்ளனர் கோவை கல்லூரி மாணவர்கள்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் 44 கிலோ எடையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இரு சக்கர வாகனத்தில் உள்ள பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 25 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என்கின்றனர்.

ஒருமுறை சார்ஜ் செய்ய அதிகபட்சமாக ஒன்றரை மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் எடுத்துகொள்ளும்படியும் எடை குறைவு, உயரம் குறைவு, சார்ஜ் செய்யும் நேரம் குறைவு மின்கட்டணம் குறைவு என்ற நோக்கத்தில் இந்த வாகனத்தை வடிவமைத்துள்ளனர். இதில் உள்ள விளக்குகளும் எல்.இ.டி விளக்குகள் என்பதால் குறைந்த அளவு பேட்டரியையே எடுத்து கொள்ளும். 25 கிலோமீட்டர் அளவிற்கு சென்று வர ஏதுவான வாகனமாக இந்த வாகனத்தை வடிவமைத்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய ஆதி ஸ்ரீனிவாசன் (வாகனம் வடிவமைப்பு மாணவர்களில் ஒருவர்) கூறுகையில், ''10 முதல் 15 கிலோமீட்டர் தொலைவில் வாகனத்தில் செல்வதற்காக இந்த வாகனத்தை வடிவமைத்துள்ளோம். தற்போது மார்க்கெட்டுகளில் உள்ள எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் 100 கிலோ வரை எடை இருக்கும். 60-70 கிலோ மீட்டர் தொலைவு செல்லும். ஆனால் இதுவரை சிறிய வடிவிலான வாகனத்தை வடிவமைக்கவில்லை. அதை நாங்கள் செய்திருக்கிறோம்.

மாணவர் ஆதி ஸ்ரீனிவாசன்

இந்த வாகனம் 44 கிலோகிராம் தான் இருக்கும். உயரமும் குறைவு என்பதால் யார் வேண்டுமானாலும் இயக்கலாம். வடிவமைப்பை பொறுத்தவரை கிராவிட்டியை மையத்தில் இருப்பது போல் வடிவமைத்துள்ளதால் எடை இழுக்கும் விஷயத்திலும் குறை இருக்காது (140கிலோ வரை எடை இழுக்கும்).

இதனை வடிவமைக்க 20 ஆயிரம் ரூபாய் செலவாகும். இந்த வாகனத்தையும் பெட்ரோல் வாகனத்தையும் ஒப்பிடும் போது பெட்ரோல் வாகனம் 10கி.மீ செல்ல 30 ரூபாய் செலவாகிறது. இந்த எலக்ட்ரிக் வாகனத்தில் ஒரு முழு சார்ஜ் செய்தால் 25 கிலோ மீட்டர் செல்லலாம்.

ஒரு முழு சார்ஜ் செய்ய 0.6 யுனிட் எடுத்து கொள்கிறது. இதற்கு 5 ரூபாய் தான் செலவாகிறது. எனவே 5 ரூபாய் செலவில் 25 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். அடுத்த கட்டமாக தயாரிக்க இருக்கும் வாகனத்தில் GPS சிஸ்டம் போன்றவற்றை சேர்க்கவுள்ளோம். இதனை தயார் செய்ய 20 நாள்கள் ஆனது. இதற்கு அடுத்தகட்ட வாகனம் தயாரிக்க 2 வாரம் போதுமானது. இந்த மாடலை சில நிறுவனங்களுக்கு அளிக்கவும் சிந்தித்து கொண்டிருக்கிறோம்'' என்றார்.

இதையும் படிங்க: ஆன்லைன் மூலம் அவகோடா பழம் விற்பனை: அசத்தும் மென்பொருள் பொறியாளர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.