கோயம்புத்தூர்: தடாகம் பகுதியில் 10ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் கடந்த டிசம்பர் 10ஆம் தேதியன்று பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் வெள்ளைசாமி (40) மாணவனை ஆட்டோவில் ஏறிக் கொள்ளும் படி கூறி பள்ளியில் விட்டு விடுவதாக கூறியுள்ளார்.
மாணவனும் அவரது பேச்சை நம்பி ஆட்டோவில் ஏறிய நிலையில், ஓட்டுநர் வெள்ளைசாமி மாணவனுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இது குறித்து மாணவன் பள்ளி தலைமையாசிரியரிடம் தெரிவித்திட தலைமை ஆசிரியர் மாணவனின் பெற்றோருக்குத் தகவல் அளித்துள்ளார்.
மாணவனின் பெற்றோர் அளித்தப் புகாரின் பேரில் துடியலூர் காவல் துறையினர் ஆட்டோ ஓட்டுநர் வெள்ளைசாமியை போக்சோ பிரிவின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கரோனா மூன்றாம் அலை: விஞ்ஞானி கருத்து என்ன..?