கோவை மாவட்டம் அன்னூர் பகுதி கஞ்சப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் சித்ரா தன்னை குருபிரசாத் என்பவர் சாதி ரீதியாக இழிவுப்படுத்தி தாக்க முயன்றதாக அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்த புகாரில், "நாான் அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருக்கும் பொழுது குருபிரசாத் என்பவர் அவரது வீட்டுக்கு வீட்டு வரி ரசீது போட்டுத் தரும்படி கேட்டார்.
அதற்கு வீட்டை பார்த்துவிட்டு ரசீது போட்டுத்தருகிறேன் என்று நான் கூறினேன். அதற்கு குருபிரசாத் கோபத்தோடு எனது சாதியின் பெயரைச் சுட்டிக்காட்டி, 'வீட்டிற்கு வந்து பார்த்துதான் ரசீது வழங்க முடியுமா' என்று இழிவான சொற்களால் திட்டினார்.
கொலை மிரட்டல் விடுத்து சேலையை இழுக்க முயற்சித்தார். அப்போது உடன் இருந்தவர்கள், ஊர் பொதுமக்கள் என்னைக் காப்பாற்றினர். எனவே குருபிரசாத் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.