ETV Bharat / state

இந்து முன்னணி நகர துணைத் தலைவர் மீது தாக்குதல்: வானதி சீனிவாசன் நலம் விசாரிப்பு - இந்து முன்னணி

கோவை: தாக்குதலுக்கு உள்ளான இந்து முன்னணி நகர துணை தலைவரை கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

fdsa
dfsa
author img

By

Published : Apr 11, 2021, 12:10 PM IST

கோவை போத்தனூர் பகுதி சாரதா மில் சாலை சங்கம் வீதியில் இந்து முன்னணி உக்கடம் நகர துணைத்தலைவர் ராமகிருஷ்ணன் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று தாக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரை பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி வேட்பாளருமான வானதி சீனிவாசன் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார்.

வானதி சீனிவாசன்

இது குறித்து பேசிய வானதி சீனிவாசன், ”நேற்று நடந்த சம்பவத்தை போலவே சில நாள்களுக்கு முன்பு பாஜக நிர்வாகிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. நேற்று நடந்த தாக்குதலுக்கு இதுவரை யாரையும் காவல் துறையினர் கைது செய்யவில்லை. தேர்தலுக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டவர் மீது தாக்குதல் நடத்துவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

இதுகுறித்து இந்து முன்னணி நிர்வாகிகள் காவல் துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும். இதனை தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.