கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட அதிமுக நிர்வாகிகளுடன் சட்டப்பேரவைத் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் நிர்வாகிகளுடன் பொள்ளாச்சி ஜெயராமன் பேசும்போது, "வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கு கட்சி நிர்வாகிகள் தயாராக இருக்க வேண்டும், கட்சியின் அடிமட்ட தொண்டன் முதல் அனைவரும் சிறப்பாக பணியாற்றி 2021ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி அமைக்க முழுமையாக பாடுபட வேண்டும்.
பொள்ளாச்சி சட்டப்பேரவைக்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஏராளமான திட்டங்களை தந்துள்ளனர். இதில் பொள்ளாச்சி நகர்ப்புறப் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம், மக்களின் 60 ஆண்டு கனவானா அரசு கலைக்கல்லூரி, பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை விரிவாக்கம், அம்பராம்பாளையம் கூட்டுக் குடிநீர் திட்டம், கிராமபுரங்களில் தார் சாலை வசதி எனப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இதை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி சிறப்பாக பணியாற்ற வேண்டும், வார்டு வாரியாக தொழில்நுட்ப பிரிவு இளம்பெண்கள் பாசறை உறுப்பினர்களைச் சேர்த்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: மாணவர்களின் விடிவெள்ளியாக திகழும் முதலமைச்சர் - அமைச்சர் உதயகுமார்