ETV Bharat / state

மாணவிகளுக்கு துணை தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை!

கோவை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த துணை தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரி, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் மாதர் சங்கத்தினர் புகார் அளித்தனர்.

Coimbatore SFI and Madhar sangam petition
Assistant headmaster sexual harassment case
author img

By

Published : Feb 12, 2020, 4:56 PM IST

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுக்காவிற்கு உட்பட்ட அரசு துவக்கப்பள்ளியில் துணை தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் மாகாளியப்பன். இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன் 11 மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இதை மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையறிந்த ஆசிரியர் மாகாளியப்பன், நெகமம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார். மாவட்ட கல்வி அலுவலர், உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ஆகியோர் மாகாளியப்பனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகக் கூறி, அப்பகுதி மக்கள் காட்டமட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

எஸ்.எப்.ஐ. மற்றும் மாதர் சங்கத்தினர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார்

இதையடுத்து, ஆசிரியரை கைது செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர், அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மாணவர் சங்கத்தின் செயலாளர் தினேஷ் ராஜா, மாதர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் ராஜலட்சுமி ”இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

SFI சங்கத்தின் செயலாளர் தினேஷ் ராஜா, மாதர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் ராஜலட்சுமி பேட்டி

இதையும் படிங்க: ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - முதியவர் கைது.!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.