தமிழ்நாட்டில் 'குழந்தைகள் ஆபாச படம்' பார்ப்பவர்களைப் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படுவார்கள் என காவல் துறை அறிவித்திருந்தது. இதனையடுத்து, சமூக வலைதளங்களில் ஆபாச படம் பகிர்ந்த 40 பேர் குறித்த தகவல்களை சென்னை தனிப்படையினர் ரகசியமாக ஒவ்வொரு மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும் அனுப்பிவைத்தனர்.
அதனடிப்படையில், ஒவ்வொரு மாவட்ட கண்காணிப்பாளரும் முகநூல், சமூக வலைதளம் ஆகியவற்றை அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் காவல் துறையினர் அந்தப் பட்டியலில் உள்ளவர்களின் ஃபேஸ்புக் பக்கத்தை கண்காணித்துவந்தனர்.
அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் காவல் நிலைய காவல் துறையினர் அஸ்ஸாம் இளைஞர் ஒருவரின் ஃபேஸ்புக் பக்கங்களைக் கண்காணித்துவந்தனர்.
அப்போது, அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ரபிக் ஃபுல் இஸ்லாம் (19) என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கங்களில் சிறுவர், சிறுமியர்களின் ஆபாச காணொலிகளை பதிவிறக்கம்செய்து மற்றவர்களுக்கு பகிர்ந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ரபீக் புல் இஸ்லாமை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
அதன்பின், ரபீக் புல் இஸ்லாம் மீது தகவல் தொழில்நுட்பப் பிரிவு, போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவுசெய்து கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:
'மோடி 2.0' அது நிர்மலாவுக்கு சோதனைக்காலம்: பட்ஜெட் 2020இல் அதைச் செய்யுங்க ஃபர்ஸ்ட்!