தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருவதையடுத்து, பொது இடங்களில் மக்கள் கூட்டமாகக் கூடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கோவை மத்திய சிறையிலுள்ள விசாரணைக் கைதிகளை விடுவிக்க சிறை நிர்வாகம் முடிவெடுத்தது.
அதன்படி, கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த 5 பெண்கள் உள்பட 136 பேர் நள்ளிரவில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: திருப்பூரில் 31ஆம் தேதி வரை மூடப்படும் பின்னலாடை நிறுவனங்கள்