சாராயம் காய்ச்ச வெல்வேள் மரத்தினை வெட்டியவர்கள் கைது! - Two arrested for cutting down velvet tree
கோவை: சாராயம் காய்ச்ச வெல்வேள் மரத்தினை வெட்டியதாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

வெல்வேள் மரத்தினை வெட்டியதாக கைது செய்யப்பட்ட இருவர்கள்
தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மதுக்கடைகள் திறக்காததால் கள்ளச்சாராயம் அதிக இடங்களில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
அப்படி தயாரிப்போரை காவல் துறையினரும் கைது செய்து வருகின்றனர்.
சாராயம் காய்ச்ச வெல்வேள் மரத்தினை வெட்டியவர்கள் கைது
பின்னர் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த காவல் துறை, மாவட்ட வன அலுவலரின் உத்தரவின் படி தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ. 20,000 என அபராதம் விதித்தனர்.
இந்த மரத்தின் பட்டைகள் வணிக ரீதியாகப் பயன்படும் என்பதாலும், பட்டையை உரிப்பது சட்ட விரோதமான செயல் என்பதாலும், அபராதம் விதிக்கப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவம்... வரிசையாக வரும் குற்றச்சாட்டுகள்!