சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை, 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருக்கிறது.
இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ' பினராய் விஜயன் அரசு கடந்த ஆண்டு பீடி, சிகரெட், மது குடிக்கும் பெண்களை சபரிமலைக்குள் அனுமதித்தார். இதனால் கோயிலின் புனிதம் கெட்டுவிட்டதாகவும், சபரிமலையை ஒரு சுற்றுலாத் தலமாக மாற்றவேண்டும் என்பதற்காகவே பினராயி விஜயன் இவ்வாறு செய்வதாகவும்' அர்ஜுன் சம்பத் வேதனை தெரிவித்தார்.
மேலும், ' ஐயப்பன் கோயிலின் புனிதத்தைக் காக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசிற்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இருக்கிறது' என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: சபரிமலை வழக்கு: 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்