கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், ஊரடங்கில் சில தளர்வுகளை ஏற்படுத்தி மத்திய, மாநில அரசுகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளைத் திறக்க அரசு அனுமதியளித்தது.
இதனைக் கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் சத்தியாகிரக ஆர்ப்பாட்டத்தை நடத்த முடிவெடுத்திருந்தனர். ஆனால் அதற்கு முன்பே முன்னெச்சரிக்கையாக காவல் துறையினர் உக்கடம் பகுதியில் உள்ள அர்ஜூன் சம்பத் வீட்டிற்குச் சென்று அவரை கைது செய்து, ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ”இந்து மக்கள் கட்சியினர் அரசிற்கு எதிரானவர்கள் அல்ல. ஊரடங்கு முழுமையாக முடிந்து கரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் வந்தவுடன் மதுக்கடைகளைத் திறக்கலாம். அதற்கு முன்பாக கடைகளைத் திறந்தது மிகவும் தவறான செயல். இதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவிருந்தோம். ஆனால் அதற்கு முன்பே காவல் துறையினர் கைதுசெய்து விட்டனர்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையும் பார்க்க: விபத்து ஏற்பட்ட விசாகப்பட்டினம் ரசாயன தொழிற்சாலை யாருடையது?