ETV Bharat / state

146 நாட்களுக்கு பிறகு அரிசி ராஜா யானை விடுதலை! - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

கோயம்புத்தூர்: டாப்சிலிப் வரகளியாறு முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த அரிசி ராஜா யானை, 146 நாட்களுக்கு பிறகு கூண்டிலிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளது.

அரிசி ராஜா யானை வெளியேற்றம்
அரிசி ராஜா யானை வெளியேற்றம்
author img

By

Published : Mar 3, 2021, 11:02 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வனச்சரகம் நவமலை வனப்பகுதியில் அரிசி ராஜா யானை தாக்கியதில் முதியவர், சிறுமி ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் வனத்துறை ஊழியர் உட்பட சிலர் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து அர்த்தனாரிபாளையம் பகுதியில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.

இதையடுத்து அரிசி ராஜா யானையைப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் கும்கி யானைகள் உதவியுடன் கடந்த 2019 நவம்பர் 14ஆம் தேதி அரிசி ராஜா யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.

கூண்டிலிருந்து குதூகலத்துடன் வெளியேறிய அரிசி ராஜா யானை

பின்னர் டாப்சிலிப் வரகளியாறு முகாமில் இந்த யானை பராமரிக்கப்பட்டு வந்தது. தற்போது 146 நாட்கள் பிறகு அரிசி ராஜா யானை கூண்டிலிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளது என ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பெண் யானையை தாக்கிய பாகனுக்கு நிபந்தனை பிணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.