ETV Bharat / state

மிதுன் சக்கரவர்த்தியின் மனைவிக்கு நிபந்தனை ஜாமீன்

பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கைதான இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் மனைவிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

author img

By

Published : Jun 15, 2023, 5:24 PM IST

Etv Bharat
Etv Bharat

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் 2021ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி படித்த பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்த மிதுன் சக்கரவர்த்தி என்பவர் கொடுத்த பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் தமிழ்நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

அந்தக் கடிதத்தில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி தவிர தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த நபர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு இருந்தார். இதனைத்தொடர்ந்து பல்வேறு மாணவர்கள் அமைப்புகள், மகளிர் அமைப்புகள், அரசியல் இயக்கங்கள் உள்ளிட்டப் பலரும் போராட்டங்களில் இறங்கினர்.

இந்நிலையில் மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், மாணவியின் வீட்டின் அருகில் வசித்து வந்த மனோஜ் ராஜ் மற்றும் முகமது சுல்தான் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வந்தது.

இதையும் படிங்க: ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்ப இயலாது - வானதி சீனிவாசன் அறிக்கை

விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அரசு தரப்பில் மேலும் சிலரைக் கைது செய்யப்பட வேண்டி இருப்பதாக கூறி கடந்த மாதம் நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்த நிலையில், இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர், ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் மனைவி அர்ச்சனாவை நேற்று முன் தினம் கைது செய்தனர்.

பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டது தெரிந்தும் காவல் துறையிடம் தெரிவிக்காததால் அர்ச்சனாவையும் போக்சோ சட்டத்தில் கைது செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கைதான அர்ச்சனா ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்த நிலையில் அர்ச்சனாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி போக்ஸோ நீதிமன்றம் இன்று (ஜூன் 15) உத்தரவிட்டுள்ளது.

15 நாட்களுக்கு ஒருமுறை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையின் அடிப்படையில் ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியின் மனைவி கைது!!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.