கோவை: தென்னம்பாளையம் அருகே உள்ள அரசூர் ஊராட்சியில் கரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்துவருகிறது. அங்கு கடந்த வாரங்களாகவே தினசரி பாதிப்பு 300க்கு மேல் பதிவாகிறது. மேலும் கரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. கரோனாவை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது.
அரசூர் பகுதியில் முகக்கவசம் அணியாமல் சுற்றி திரிபவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் நேற்று முக கவசம் அணியாமல் சுற்றி திரிந்தவர்களை பிடித்து ஆம்புலன்சில் ஏற்றி அரசூர் மயானத்தை சுற்றிக் காட்டி கரோனா ஆபத்து குறித்து சுகாதாரத்துறையினர் எடுத்துரைத்தனர்.
அப்போது கரோனா பாதித்தால் உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை என்பதையும் மயானத்தில் புதைக்கக் கூட இடம் இல்லை என்பதையும் எடுத்துக் கூறி அனுப்பி வைத்தனர். இது அச்சுறுத்தும் வகையில் இருந்தாலும் முக கவசம் அணியாமல் சாலையோரம் செல்பவர்களை எச்சரிக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:ஆறு கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி