ஆயுத பூஜை தீபாவளி பண்டிகைகள் நெருங்கி வருவதால் அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து தமிழ்நாடு முழுவதும் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் தொடர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், கோவை திருமலையம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள போக்குவரத்துதுறை சோதனைச் சாவடியில் காலை 5 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேஷ் தலைமையிலான படையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போக்குவரத்துத்துறை சோதனை சாவடி அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத 85 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் மோட்டார் வாகன ஆய்வாளர், அவரது உதவியாளர்,அலுவலக உதவியாளர் மூன்று பேரிடம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சோதனை முடிவில் முழு விவரங்கள் தெரிய வரும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!