கோயம்புத்தூர்: சவுரிபாளையம் பிரிவு பகுதியிலுள்ள ராயல் ஸ்கைலைன் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது தளத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜின் இண்டாவது மகன் மருத்துவர் இன்பன் வசித்து வருகிறார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் மருத்துவர் இன்பனின் குடியிருப்பில் இன்று காலை 7 மணியளவில் 8 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இன்பன் கோவையில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக இளம் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். மேலும், அவர், ஸ்ரீ வாசுதேவபெருமாள் ஹெல்த் கேர் என்ற நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "10 ஆண்டுகளில் எடப்பாடி அரசு செய்த ஊழலை ஸ்டாலின் அரசு ஒரே ஆண்டில் செய்துவிட்டது"