கோயம்புத்தூர்: சித்தாபுதூர் பாஜக அலுவலகத்தில் கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாஜக சார்பில் நிவாரண பொருள்கள் அனுப்பி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சசிகலா அரசியல் வருகை அதிமுக உள்கட்சி விவகாரம். அதில், கருத்து சொன்னால் சரியாக இருக்காது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். தமிழ்நாட்டில் பாஜக, எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது.
யார் எதிர்க்கட்சி என்பதில் அதிமுக பாஜக இடையே எந்த ஒரு போட்டியில் இல்லை. தமிழ்நாடு மின் வாரியத்தில் ஊழல் நடக்க போகிறது என்பதை சுட்டிக் காட்டுகிறோம். அமைச்சர் செந்தில் பாலாஜி வாயிலிருந்தே ஆதாரம் வெளிவரும்.
ஆதாரம் கொடுக்காமல் யாரும் பேசவில்லை, முதலமைச்சர் கண் வைத்துக் கொண்டுதான் இருக்கிறார். மின்சாரத் துறை மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்" என்றார்.
இதையும் படிங்க: தமிழ் திரையுலக மன்னனுக்கு விருது!