கோயம்புத்தூர்: பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் 123வது பிறந்த தினத்தை ஒட்டி, கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர் அரங்கில், 'Rise of New India - ரைஸ் ஆஃப் நியூ இந்தியா' எனும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது.
புது டெல்லி டாக்டர்.ஷியாமா பிரசாத் முகர்ஜி ஆராய்ச்சி அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை இயக்குநர் அனிர்பன் கங்குலி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் பேராசிரியர் கனகசபாபதி ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார். இதில் ஏராளமான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய அண்ணாமலை, “தேசிய சிந்தனை இருக்கக் கூடிய மண் கோவை. பெங்காளிகள் கூர்மையான புத்தி உடையவர்கள். ஆய்வுக் கட்டுரையில் இந்தியாவின் பொருளாதாரம் 250 ஆண்டுகளுக்கு முன்பு 23 சதவீதம், சர்வதேச GDPக்கு பங்களித்தது என கூறப்பட்டுள்ளது. அதனால்தான் rise of india என்ற பாணியில் பேசுகிறோம். இந்தியா எப்போதும் சுதந்திரமாக இருந்தது இல்லை. பல ஆண்டுகளாக வெளியுறவுக் கொள்கையில் சுதந்திரமாக இருந்தது இல்லை.
மக்கள் தொகை குறைவு, பிரச்னைகள் அதிகம் உள்ள மிக சிறிய நாடுகள் சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளன. எதிர்காலத்தில் இந்தியாவை மையமாகக் கொண்ட பொருளாதரம் உருவாகும். 2004இல் இந்தியா 12வது பொருளாதர பெரிய நாடாக இருந்தது. 2014 வரை 11வது இடம் வரையே முன்னேறின. ஆனால், 2014 முதல் 2023இல் சுமார் 10 ஆண்டுகளில் 11வது இடத்தில் இருந்து 5 ஆவது இடத்திற்கு முன்னேறியது. Small and medium enterprise என்ற கனவில் மோடி வளர்ச்சியை முன்னெடுத்து வருகிறார்.
முத்ரா திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு 2 லட்சம் கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான், ஜெர்மனி ஆகிய இரு நாடுகளையும் நாம் விரைவில் முந்த உள்ளோம். பொருளாதாரா நிபுணர்கள் இந்தியாவில் 2047இல் 12 லட்சம் சராசரி வருவாய் ஈட்டுவார்கள் என்கின்றனர். இந்தியா பொருளாதாரத்தில் POWER HOUSE-ஆக மாறி வருகிறது. எலான் மஸ்க் கூட மோடியின் விசிறி என்கிறார். ஏனெனில், மோடி டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு முக்கியதத்துவம் அளிக்கிறார்.
F141 என்ற தொழில்நுட்பத்தை யாருக்கும் கொடுக்காமல் இந்தியாவிற்கு முதல் முறையாக கொடுத்தது அமெரிக்கா. ட்ரோன் டெக்னாலஜியில் இந்தியா மிகச் சிறப்பாக முன்னேறி வருகிறது. கொடுக்கவில்லை என்றால், கரோனா தடுப்பூசி போல நாமே கண்டுபிடித்து விடுவோம் என அமெரிக்கா கொடுத்து விடுவார்கள். சோழர்கள் செய்ததுபோல மோடி எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு எதையும் செய்து வருகிறார்.
இந்தியாவை முத்து மாலை போல சீனா சுற்றி உள்ள நாடுகளின் வழியே நெருக்க பார்த்தது. இதை காங்கிரஸ் 10 ஆண்டுகள் வேடிக்கை பார்த்தது. மோடியின் செயல்களை புரிந்து கொள்ள மற்ற அரசியல் தலைவர்களுக்கு 10 ஆண்டுகள், அரசுகளுக்கு 100 ஆண்டுகள், தமிழ்நாடு அரசு வளர இன்னும் 200 ஆண்டுகள் ஆகும். எந்த ஒரு பிரதமரும் போகாத நாடுகளுக்கு மோடி சென்று வருகிறார்.
காங்கிரஸின் சிந்தனைகளுக்கும், மோடியின் சிந்தனைகளுக்கும் அதிக வித்தியாசம் உண்டு. வெள்ளை மாளிகையில் விருந்தே கொடுத்தாலும், சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையில் மோடி உறுதியாக இருப்பார். ஆக்டோபஸ் போன்று 20 ஆண்டுகளாக இந்தியாவின் கைகள் சிக்கிக் கிடந்தன. மோடி ஒவ்வொரு கையாக விடுதலையாக்கி வருகிறார்.
முன்பெல்லாம் பிரச்னை என்றால் ஐக்கிய சபைகள் வரும் வரை பொறுத்திருக்க வைத்தார்கள். ஆனால், இன்று உக்ரேன் ரஷ்ய போரை ஐந்தரை மணி நேரம் நிறுத்த காரணமாக இருந்து, நம் மாணவர்களை காப்பாற்றி சொந்த நாடு அழைத்து வந்தவர் மோடி. அந்த நேரத்தில் அமெரிக்காவே இந்தியாவின் உதவியுடன் சில மாணவர்களை மீட்டது.
2014க்கு முன்பு 81 தமிழர்கள் இலங்கையால் கொல்லப்பட்டனர். ஆனால், மோடி வந்த பிறகு அந்த நிலை மாறி நம் மீனவர்கள் ஆழ்கடல் சென்று வருகின்றனர். இனி சண்டை என்றால் நமக்கு சீனாவுடன்தான் வர வாய்ப்பு உள்ளது. ஏனெனில், அவர்களும் நம்மைப் போல வளர்ந்து வருகிறார்கள். கடந்த 9 ஆண்டுகளில் அதிகம் வளர்ந்த பிராண்ட் என்றால் அது இந்தியாதான்” எனத் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஆர்ட்டிகள் 370 நீக்கப்பட வேண்டும் என தெரிவித்த மனிதர் ஷாம் பிரசாத் முகர்ஜி.
அவரது 123 வது பிறந்த நாளை கொண்டாடுகிறோம். ரவீந்திரநாத் ஜட்ஜ்மெண்ட் படிக்கவில்லை. அதைப் பார்த்த பின்பு அதன் தகவலை தெரிவிக்கிறேன். அறப்போர் இயக்கம் டிரான்ஸ்பார்மம் வாங்கியதாக 397 கோடி ரூபாய் ஊழலை தெரிவித்துள்ளனர். டெண்டர் எப்படி நடந்தது என தெரிவித்துள்ளனர். டெண்டர் பிக்சிங் நடந்துள்ளது. அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டுக்கு நாங்கள் ஆதரவு.
அறப்போர் புகார் குறித்து விசாரணை செய்ய வேண்டும். இதிலாவது முதலமைச்சர் கவனம் செலுத்துவாரா அல்லது செந்தில் பாலாஜி தானே, முக்கியமானவர் தானே என காப்பாற்றப் போவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஆளுநர் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு ஆளுநர் அறிக்கை மூலம் பதில் அளித்துள்ளார். திமுக இத்தனை காலம் நம்மை ஏமாற்றி உள்ளது. ஆளுநர் அதிகமாக பேசக்கூடாது என்பதை வைத்து சாதகப்படுத்திக் கொள்கின்றனர்.
சிபிஐ ஒரிஜினல் பேப்பர் ஆகியவற்றை கொடுக்காதபோது எப்படி ஆளுநர் செயல்படுவார். ஆர்.எஸ்.பாரதி பேசும் பேச்சுக்கும், வயதுக்கும் சம்பந்தமில்லை. என்னுடைய தொண்டர்கள் அண்ணாமலையை பிரியாணி போட்டு விடுவார்கள் என அவர் தெரிவிக்கிறார். அருவாள் யார் புடிச்சாலும் வெட்ட தான் செய்யும். நாம் விவசாயி வேற.
ஒரு கன்னத்தை அடித்தால் ஒரு கன்னத்தை காட்ட அரசியலுக்கு வரவில்லை. என்ன தலைகீழ நின்னு தோப்பு காரணம் போட்டாலும் 2024 இல் 400 எம்பி பெற்று மீண்டும் பிரதமராக மோடி வருவது உறுதி. தமிழகத்தில் 39 வருவது உறுதி. எலக்ட்ரானிக் எக்ஸ்போர்ட்டில் நம்பர் ஒன் தமிழ்நாடு என முதல்வர் விளம்பரம் அறிவித்தார். ஆப்பிள் உலக அளவில் ஏழு சதவீதம் எக்ஸ்போர்ட் இந்தியாவில் உள்ளது. முதல்வர் நம்பர் ஒன் என இவர் ஸ்டிக்கர் ஒட்டுகிறார்.
முதல்வரால் ஜப்பான், சிங்கப்பூர் சுத்தியே மூவாயிரம் கோடி தான் கொண்டு வர முடிந்தது. ஒரு சதவீதம் கூட தமிழக அரசு காரணம் இல்லை. எலக்ட்ரிக் பைக் ஒசூரை சுற்றி செல்கின்றனர். தமிழகத்திற்குள் வர பயப்படுகின்றனர் காரணம் 20% கமிஷன்.
யாரையும் பலவீனப்படுத்தி பாஜக வளராது. பாஜக கூட்டங்களுக்கு மக்கள் வர காரணம் மோடி மீது உள்ள மக்களின் நம்பிக்கை. சுப்பிரமணியசாமி ஐயாவை இதுவரை பார்க்கவில்லை பார்க்கப் போவதும் இல்லை, யார் ஆசீர்வாதமும் எனக்கு தேவையில்லை.
இது ஓல்ட் இந்தியா ஸ்டைல். அவர் நலமாக வாழ வேண்டும். ஆனால் கட்சியின் உழைப்பை மட்டுப்படுத்தினால் அண்ணாமலை ஏற்றுக் கொள்ள மாட்டான். அவர் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. கோவையில் உள்ள தொழிலதிபர்களுக்கு இனியாவது சுதந்திரம் கிடைக்க வேண்டும். அண்ணாமலையை அழைத்து நிகழ்ச்சி நடத்தினால் கோவையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நிறுவனத்திற்கு கரண்ட் கட். தொழிலதிபரை மிரட்டுகின்றனர். முத்துசாமி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் கோவை வளர்ச்சிக்கு செயல்படுவார்.
டி.கே.சிவக்குமார் பற்றி எனக்கு தெரியும். எலக்சன் மேனிபெஸ்டோ மேகதாதுவிற்கு போட்டார். தமிழர் நலனில் கை வைத்தால் எந்த எல்லைக்கும் போவோம் என என திமுக தெரிவிக்க வேண்டும். நான் தொண்டனாக பாராளுமன்றத் தேர்தலில் மாநில தலைவராக வேலை செய்வேன். என்னுடைய வேலை ஒருங்கிணைப்பு. நான் வந்திருப்பது தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த. எனக்கு பவர் பாலிடிக்ஸ் பண்ண எண்ணம் இல்லை. எங்கள் தலைமைக்கு தெரியும்.
இரண்டாவது ஊழல் பட்டியல் நடைப்பயணம் தொடங்கும் முன்பு வெளியிடப்படும். கூட்டணி கட்சிகளோடு பயணம் செய்கிறோம் சுமூகமாக போகிறோம். பருவநிலை விவகாரத்தில் மாநில அரசு முன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மத்திய அரசுடன் ஒருங்கிணைப்பாக இருக்க வேண்டும்.
காவிரி தண்ணீரையும் கொண்டு வர வேண்டும். வானதி அக்காவின் மீது தனிப்பட்ட முறையில் வன்மத்தை கக்குகிறார்கள். திமுகவிற்கு தெரிந்தது பெண்களை ஆபாசமாக பேசுவது. இதைப்பற்றி நானும் கவலைப்பட போவது கிடையாது. அவங்களும் கிடையாது. மனித குலத்தின் மொத்த அழுக்கின் வடிகால் திமுக” என்றார்.