கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் சாய்பாபா காலனியில் உள்ள பேருந்து நிலையத்தில் இயங்கிவந்த தற்காலிக அண்ணா மார்க்கெட்டில் அரசு கூறிய சமூக இடைவெளி, பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் கடைப்பிடிக்காத காரணத்தினால் அரசு அலுவலர்கள் சீல் வைத்தனர்.
மேலும், அங்கு வரும் மக்கள் கூட்டம் கூட்டமாய் வந்து அரசு கடைப்பிடிக்க உத்தரவிட்ட சமூக இடைவெளியை பின்பற்றாத காரணத்தினாலேயே ஒழுங்கு முறை நடவடிக்கைக்காக, இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஊரடங்கு எதிரொலி: காய்கறிகள் விலை உயர்வு