இலங்கை தாதா அங்கோடா லொக்கா மரணம் குறித்த வழக்கில், அவருடைய காதலி அமானி தான்ஜி, வழக்குரைஞர் சிவகாமசுந்தரி, தியானேஸ்வரன் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். கடந்த 12ஆம் தேதி, இவர்கள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது சிபிசிஐடி காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க மூன்று நாட்கள் அவகாசம் கோரியிருந்தனர்.
அதற்கு ஒப்புதல் அளித்த நீதிபதி ஸ்ரீ குமார், மூன்று பேரையும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் எனக் கூறியிருந்தார். அதன்படி, அம்மூவரும் இன்று (ஆகஸ்ட் 15) கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சுமார் 2 மணி நேரம் வரை நடைபெற்ற விசாரணையை அடுத்து, பொள்ளாச்சி சிறையில் தியானேஸ்வரனையும், சென்னை புழல் சிறையில் அமானி தான்ஜியையும், கோவை மத்திய சிறையில் சிவகாமசுந்தரியையும் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அமானி தான்ஜி இன்று கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, நாளை சென்னை புழல் சிறைக்கு மாற்றப்படுவார் என்றும், 15 நாட்கள் கழித்து சிறையில் இருந்தபடியே காணொலி வாயிலாக மூவரிடமும் நீதிபதி விசாரணை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அங்கோடா லொக்கா வழக்கு: காதலி உள்பட மூவருக்கு 3 நாள் காவல்