கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களை அரசு ஊழியராக்கும் அரசின் அறிவிப்பு, அகவிலைப் படியுடன் கூடிய ஓய்வூதியம், முறையான குடும்ப ஓய்வூதியம், பணி ஓய்வின்போது பணிக்கொடையாக அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம்,என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி (பிப்.22) முதல் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு தங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.