ETV Bharat / state

எளிய மனிதர்களின் நீதி மறுக்கப்பட்ட குரலை‌ அநீதி படம் பேசும் - இயக்குநர் வசந்தபாலன்

எளிய மனிதர்களின் நீதி மறுக்கப்பட்ட குரலை‌ அநீதி படம் பேசும் என கோவையில் நடைபெற்ற நிகழ்சியில் இயக்குநர் வசந்தபாலன் பேட்டியளித்துள்ளார்.

Aneethi will speak the voice of simple people denied justice: Director Vasanthapalan
எளிய மனிதர்களின் நீதி மறுக்கப்பட்ட குரலை‌ அநீதி படம் பேசும்:இயக்குநர் வசந்தபாலன்
author img

By

Published : Jul 12, 2023, 7:32 PM IST

எளிய மனிதர்களின் நீதி மறுக்கப்பட்ட குரலை‌ அநீதி படம் பேசும்:இயக்குநர் வசந்தபாலன்

கோயம்புத்தூர்: இயக்குநர் வசந்தபாலன் வெயில், அங்காடி தெரு உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களைக் கவர்ந்தவர். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அநீதி'. இந்தப் படத்தில் ‘கைதி’, ‘மாஸ்டர்’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்த அர்ஜூன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் மற்றும் வசந்தபாலனின் அர்பன் பாய்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.

'அநீதி' படத்தில் அர்ஜூன் தாஸுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாரின் நினைவாக அவருடைய கவிதைகளிலிருந்து வரிகளைத் தொகுத்து ஒரு பாடலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜிவி.பிரகாஷ் அப்பாடலைப் பாடியுள்ளார். இந்த படம் வரும் ஜூலை 21-ம் தேதி படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் கோவை அவிநாசி சாலையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் அநீதி திரைப்படக் குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய இயக்குநர் வசந்தபாலன் கூறியதாவது, 'அநீதி திரைப்படத்தில் முதல் முறையாக அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். அர்ஜூன் தாஸ் பெரிய நடிகராக வருவார். இந்த கதையை எழுதி முடித்த போதே, இந்த ரோல் அர்ஜூன் தாஸ் செய்தால் சரியாக இருக்கும் என நினைத்தேன். காதல், சோகம், கண்ணீர் எனப் பல இடங்களில் அழகாக அவர் நடித்துள்ளார். அவரது குரல் இந்தப் படத்தை தூக்கி நிறுத்தும்.

எளிய மனிதர்களின் நீதி மறுக்கப்பட்ட குரலை‌ 'அநீதி' படம் பேசும். நான் எனது வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டு, திரில்லர் பாணியில் இப்படத்தை எடுத்துள்ளேன். ஜிவி. பிரகாஷின் நான்கு பிரமாண்டமான பாடல்கள் உள்ளது. இப்படம் சுவாரஸ்யமான படமாக இருக்கும்.

மேலும் சக மனிதனை மனிதனாக நடத்த வேண்டுமென்ற குரலை இப்படம் பேசும். அங்காடி தெரு படம் வேறு; அநீதி படம் வேறு, இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது. இது திரில்லரான வாழ்வியல் பதிவு'' எனத் இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய கதையின் நாயகன் அர்ஜூன் தாஸ், ''ரொம்ப பேருக்கு இப்படி ஒரு வாய்ப்பு அமையுமா எனத் தெரியவில்லை. இப்படத்தில் பெரிய நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனால் நிறைய கற்றுக் கொண்டேன். வசந்தபாலன் அழைத்தபோது, வில்லன் ரோல் தான் தருவார் என நினைத்தேன். ஆனால், லீட் ரோல் பண்ண வேண்டுமென சொன்னதும், உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். அவருடன் வேலை செய்ய வேண்டுமென்ற நீண்ட நாள் ஆசை நிறைவேறியது.

நான் எப்போதும் இயக்குநர்களிடம் சரணடைந்து விடுவேன். அவர்கள் சொல்லும்படி நான் நடிப்பேன். எனக்கு நீண்ட காலத் திட்டங்கள் இல்லை. லியோ திரைப்படத்தில் நான் இருக்கிறேனா, இல்லையா எனப் பலரும் கேட்கிறார்கள். அது சர்ப்ரைஸாக இருக்கட்டும். படம் வரும்போது தெரிந்து கொள்ளுங்கள்'' எனத் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய துஷாரா விஜயன், ''அநீதி எனது கேரியரில் முக்கியமான படமாக இருக்கும். நான் இதுவரை நடிக்காத வேறுபட்ட கேரக்டரில், இன்னசென்ட்டாக நடித்துள்ளேன். எனக்கும், அர்ஜூன் தாஸ்-க்கும் நடிப்பதில் உள்ள போட்டி நன்றாக இருக்கும். வசந்தபாலன் படத்தில் வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயம்'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க :தமிழ் அன்னையின் தவப்புதல்வன் நா.முத்துக்குமார் - பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.