ETV Bharat / state

ஆனைமலை பகுதிகளில் கனழையால் வீடுகள் சேதம் - புதிய வீடு கட்டித்தர மக்கள் கோரிக்கை - damaged houses due to the heavy rain

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதால் புதிய வீடு கட்டித்தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Etv Bharatஆனைமலை பகுதிகளில் கனழையால் வீடுகள் சேதம் - புதிய வீடு கட்டித்தர மக்கள் கோரிக்கை

author img

By

Published : Dec 11, 2022, 3:01 PM IST

ஆனைமலை பகுதிகளில் கனழையால் வீடுகள் சேதம் - புதிய வீடு கட்டித்தர மக்கள் கோரிக்கை

பொள்ளாச்சி: வங்கக்கடல் கரையோர பகுதிகளில் வந்த மாண்டஸ் புயல் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் தாக்கத்தால் கடலோர மாவட்டப்பகுதிகளை தாண்டியும் மலைப்பகுதிகளும் பெரும் பாதிப்பு அடைந்துள்ளன. இயல்பாகவே மலைப்பகுதிகளில் சரியான சாலை வசதி இல்லாமை, மருத்துவ வசதி குறைபாடு என பல பிரச்சனைகளை அம்மக்கள் நாள்தோறும் சந்தித்து வருகின்றனர்.

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரக பகுதிக்கு உட்பட்ட ஆழியாறு அணை கரையோரம் உள்ள சின்னார்பதி மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியாகும். இங்கு 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். வேட்டை தடுப்பு காவலர்களாகவும், தோட்டங்களுக்குக் கூலி வேலைக்குச் செல்பவர்களும் இங்கு வாழ்ந்து வருகின்றனர். கடந்த 1992 ஆம் ஆண்டு இங்கு வசிப்பவர்களுக்குத் தமிழ்நாடு அரசால் குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டன.

சேதமான பழைய வீடுகள்: 30 வருடங்கள் கடந்த நிலையில் வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்து மழைக் காலங்களில் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். 2012 ஆம் ஆண்டு வனத்துறையினர் தகரச் சீட்டுகள் மூலம் வீடுகள் குறைந்த அளவில் கட்டித்தரப்பட்டது. காலப்போக்கில் தொடர் மழையின் காரணமாக மற்ற வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தது.

இந்நிலையில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு வால்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக சின்னார் பதியில் மழையால் 6 வீடுகள் தரை மட்டமானது. இதையடுத்து வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி நேரில் சென்று ஆய்வு செய்து மலைவாழ் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய உதவித் தொகை வழங்கினார்.

தற்போது தமிழ்நாட்டில் மாண்டாஸ் புயல் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று (டிச.10) இரவு சின்னார் பதியில் வசிக்கும் மாயவன் என்பவரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட மாயவன் அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசு புதிய குடியிருப்புகள் கட்டி தர வேண்டும் என மலைவாழ் மக்கள் அரசுக்குக் கோரிக்கை வைக்கின்றனர். மேலும் மழை தொடர்வதால் மீண்டும் வீடுகள் இடியும் அபாயம் உள்ளது என வேதனை தெரிவித்தனர்.

இதையும் படிங்க:Video:ஹாயாக செல்பி எடுத்த நபரை ஆக்ரோஷமாக துரத்திய யானை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.