ETV Bharat / state

ஐந்து டன் காய்கறியால் தேசியக் கொடி போல் அம்மன் கோயில் அலங்கரிப்பு - கோவையில் பெரிய கடை வீதியில் உள்ள மாகாளி அம்மன் கோவில்

கோவையில் ஜந்து டன் காய்கறியால் தேசியக் கொடி போல் அம்மன் கோயில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஐந்து டன் காய்கறியால் தேசியக் கொடி போல் அம்மன் கோவில் அலங்கரிப்பு

author img

By

Published : Aug 12, 2022, 10:37 PM IST

கோவை: ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமையான இன்று அம்மன் கோயில்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமை கொண்டாடும் விதமாகவும் சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாகவும் கோவை பெரிய கடை வீதியில் உள்ள மாகாளி அம்மன் கோயிலில் தேசியக்கொடி போன்று காய்கறிகளால் கோயிலானது அலங்கரிக்கப்பட்டுள்ளது.

கோயில் கருவறை முன்பும் அம்மனைச் சுற்றிலும் கேரட், முள்ளங்கி, வெண்டைக்காய், காளிபிளவர், காய்கறிகளால் தேசியக் கொடி போன்று அலங்கரிக்கப்பட்டுள்ளது. 5 டன் காய்கறிகளால் இந்த அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

கோயிலுக்கு வெளியிலும் தேசியக் கொடி பறப்பது போன்று காய்கறிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அலங்காரம் அங்கு வரும் பக்தர்கள் அவ்வழியாக செல்லும் பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இதையும் படிங்க:பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மத்திய இணை அமைச்சர் மரியாதை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.