ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியதில் இருந்து காவல் துறையினர் அனைவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையிலும் ஊக்கமளிக்கும் வகையிலும் கோயம்புத்தூரைச் சேர்ந்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கெளசிக், இளநீர் வழங்கும் பணியில் ஈடுபட்டார். அவர்களுக்கு கிருமி நாசினிகளையும் அளித்தார்.
அதனைக் காவலர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று வழங்கினார். கோயம்புத்தூர் காந்திபுரம், பாலசுந்தரம் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள காவலர்களுக்கு அவரால் முடிந்த அளவு இளநீரை வாங்கிக் கொடுத்தார்.
காவலர்கள் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் அவர்கள் மக்களின் பாதுகாப்பிற்காக செய்யும் பணியின் பொருட்டு அவர்களுக்காக இந்த சேவை செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கௌசிக் தெரிவித்தார்.
இதையும் படிங்க... தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு 41ஆக உயர்வு - சுகாதாரத்துறை தகவல்