ETV Bharat / state

எஸ்பிஐ இடஒதுக்கீடு: நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டம் - Protest

கோவை: எஸ்பிஐ வங்கியின் இடஒதுக்கீட்டை கண்டித்து கோவை மண்டல தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

sbi
author img

By

Published : Jul 26, 2019, 4:14 PM IST

எஸ்பிஐ வங்கி, கிளர்க் பணியிடங்களுக்கான இட ஒதுக்கீடு கட் ஆஃப் மதிப்பெண்களை வெளியிட்டுள்ளது. இதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 28 மதிப்பெண் என நிர்ணயம் செய்துள்ளது. மிக மிக பின்தங்கிய மக்களுக்கு இல்லாத சலுகையைக் காட்டிலும் உயர் சாதியினருக்கு கூடுதலாக எஸ்பிஐ வழங்கியுள்ளது, மேலும், இது 96 விழுக்காடு மக்களுக்கு எதிரானது. எனவே இதனைக் கண்டித்து கோவை ரயில் நிலையம் அருகே உள்ள மண்டல தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், தமிழர் விடியல் கட்சி உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென வங்கிக்குள் நுழைய முயன்றதால் அங்கு பணியில் இருந்த காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் 100-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். முன்னதாக செய்தியாளர்களிடம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் கூறுகையில், 'எஸ்பிஜ வெளியிட்டுள்ள கட் ஆஃப் மதிப்பெண் சலுகை 96% மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அதை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுக்கப்படும்' என்றார்.

நுாற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டம்
கோவை
எஸ்பிஐ வங்கியின் இடஒதுக்கீடு

Intro:ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி தெருவில் நடந்து உள்ள சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து கோவையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் மண்டல தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்Body:எஸ்பிஐ வங்கி கிளர்க் பணியிடங்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த இருக்கின்றது 8,600 வேலைகளுக்கான இட ஒதுக்கீடு கட் ஆப் மதிப்பெண்களையும் எஸ்.பி.ஜ நிர்வாகம் வெளியிட்டுள்ளது இதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 28 மதிப்பெண் என நிர்ணயம் செய்துள்ளது இது மிக மிக பின்தங்கிய மக்களுக்கு இல்லாத சலுகையை காட்டிலும் உயர்சாதியினருக்கு எஸ்பிஐ வங்கி வழங்கியுள்ளது எனவும் இது 96 சதவீத மக்களுக்கு எதிரானது எனவும் இதனை கண்டித்து கோவை ரயில் நிலையம் அருகே உள்ள மண்டல தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து இன்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் விடுதலைச் சிறுத்தைகள் தமிழர் விடியல் கட்சி உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென வங்கிக்குள் நுழைய முயன்றதால் அங்கு பணியில் இருந்த போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனையடுத்து 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன் எஸ்பிஜ வெளியிட்டுள்ள கட் ஆப் மதிப்பெண் சலுகை 96% மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவே அதை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால் தமிழம் தழுவிய போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்தார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.