கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ராமபட்டினம் ஊராட்சி அதிமுக அவைத்தலைவர் துரை தலைமையில் நூற்றுக்கு மேற்பட்டோர் அதிமுகவிலிருந்து விலகினர். பின்னர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் முன்னிலையில் இன்று திமுக மாவட்ட இலக்கிய அணிப் பொருளாளர் சபரி தலைமையில் திமுகவில் இணைந்தனர்.
அப்போது பேசிய துரை, 'அதிமுகவில் சரியான தலைமை இல்லை. இப்பொழுது இருக்கும் தலைவர்கள் முன்னுக்குப் பின் முரணாக கருத்துகளை தெரிவித்துவருகின்றனர். அடிமட்டத் தொண்டர்களை தலைவர்கள் மதிப்பதில்லை. ஆகவே நாங்கள் அதிமுகவிலிருந்து விலகி ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைய வந்துள்ளதாக தெரிவித்தனர்.
திமுக வெற்றிபெற அனைவரும் ஒன்றிணைந்து செயல்படப்போவதாக தெரிவித்தனர். அப்பொழுது வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் மருதவேல், மாவட்ட ஆதிதிராவிட அணி தேவேந்திரன், அமுத பாரதி, ராமராஜ், தர்மன், செல்வம், பாப்பாத்தி, இஸ்மாயில், அன்வர், சம்சுதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.