ETV Bharat / state

திமுக வேட்பாளர் மனுவை நிராகரிக்கக்கோரி அதிமுகவினர் முற்றுகை - ADMK party members argued with the election officers to reject the DMK candidate's nomination

வால்பாறையில், திமுக வேட்பாளரின் மனுவை நிராகரிக்கக் கூறி அதிமுகவினர் பேரூராட்சி அலுவலகத்தில் அலுவலர்களிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டு,பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

திமுக வேட்பாளர் மனுவை நிராகரிக்க அதிமுகவினர் பேரூராட்சி அலுவலகத்தில் முற்றுகை

author img

By

Published : Feb 5, 2022, 1:52 PM IST

கோவை: வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கோட்டூர் பேரூராட்சியில் இரண்டாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த அஜீஸ் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

மனுக்கள் பரிசீலனை நாளான இன்று (பிப்.5) அவரது மனுவில் ஒரு இடத்தில் கையொப்பம் இல்லை என்று கூறி, அதை நிராகரிக்க அதிமுகவினர் வலியுறுத்தினர்.

அவரது மனுவை நிராகரிக்க அலுவலர்கள் யோசனை செய்தனர். இதன் காரணமாக அதிமுக மற்றும் பிற கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது வார்டு வேட்பாளர் அஜிஸ் கூறுகையில், ”அதிமுகவிலிருந்து விலகி திமுகவின் வேட்பாளராக அறிவித்ததால் தன் மனுவை நிராகரிக்க பிரச்சினை செய்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.

மேலும் இப்பிரச்சினை சம்பந்தமாகக் கட்சித் தலைமைக்குத் தகவல் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:புதுச்சேரி முதலமைச்சர் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.